கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் முன் யோசனையுடன் செயல்படுவது நல்லது. ஆன்மீக காரியங்களில் அதிகப்படியான ஈடுபாடு உண்டாகும். புத்தி சாதூர்யத்தால் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை தாண்டி முன்னேறுவீர்கள். உங்கள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சற்றும் எதிர்பாராத பணவரவும், அதிர்ஷ்டங்களும் வந்து சேரும். குடும்பத்துடன் எப்போதும் சந்தோஷமாக இருக்க விருப்பம் ஏற்படும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டவும். ஒரு சில வீண் அலைச்சல்களை சந்திக்க வேண்டிவரும். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதை துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த ஈகோ பிரச்சனை தீரும். மனைவியின் ஆலோசனை வேண்டிய போது கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உத்யோகத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். உத்யோக பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன், வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையை கிடைக்க பெறுவர். மே மாதம் தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 18,19,20 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com